வில்லி ஆகும் ஸ்னேகா!

செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்க, வெங்கட் பிரபு இயக்கும் கோவா படத்தில்தான் வில்லியாக வருகிறார் ஸ்னேகா.
வி்ல்லி என்பதால் படத்தில் வேறு ஹீரோயின் என நினைத்து விட வேண்டாம். வில்லத்தனம் நிறைந்த ஹீரோயினாக இப்படத்தில் நடிக்கிறார் ஸ்னேகா.
கேரக்டர் குறித்து அவரிடம் சொல்லியதுமே கதை பிடித்துப் போய் நடிக்க சம்மதம் தந்தாராம் ஸ்னேகா.
இதற்கு முன்பு படையப்பாவில் ரம்யா கிருஷ்ணனும், உயிர் படத்தில் சங்கீதாவும் நெகட்டிவ் ரோல்களில் நடித்திருந்தது நினைவிருக்கலாம்.
இதற்கிடையே கோவா பட நாயகன் ஜெய்க்கு, தயாரிப்பாளர் கவுன்சில் சமீபத்தில் தடை விதித்தது நினைவிருக்கலாம். இதனால் பிரச்சினைகளை முடித்து விட்டு ஷூட்டிங் போகலாம் என்று கூறியிருக்கிறாராம் செளந்தர்யா.
ஆப்தமித்ராவில் ஸ்னேகா விலகல்..
இந்த நிலையில், கன்னடத்தில் தயாராகும் சந்திரமுகி படத்தின் 2ம் பாகத்தில் நடிப்பதாக இருந்த ஸ்னேகா இப்போது விலகி விட்டார்.
கன்னடத்தில் வெளியான ஆப்தமித்ராவைத்தான் பி.வாசு தமிழில் சந்திரமுகியாக கொடுத்தார். இப்போது ஆப்தமித்ராவின் 2ம் பாகத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் நாயகியாக ஸ்னேகாவை புக் செய்திருந்தார் வாசு. ஆனால் ஷூட்டிங் தாமதமாகி வந்தது. இதனால் படத்திலிருந்து விலகி விட்டாராம் ஸ்னேகா.
ஸ்னேகாவுக்குப் பதில் இப்போது சந்தியாவை நாயகியாக புக் செய்துள்ளதாக தெரிகிறது.
படத்தில் விமலா ராமன், கன்னட நடிகை பாவனா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் வருகின்றனராம்.


Click it and Unblock the Notifications











