மகேஷ் பூபதியுடன் கை கோர்க்கும் சௌந்தர்யா!

சௌந்தர்யா ரஜினியும் டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியும் புதிய முயற்சி ஒன்றில் இறங்கியுள்ளனர்.
தென்னிந்திய திரைப்படங்களுக்கு விருது வழங்கும் விழாக்களை ஆண்டுதோறும் நடத்த புதிய அமைப்பினை உருவாக்குகிறார்கள்.
இதன்படி, சௌந்தர்யா ரஜினியின் ஆக்கர் ஸ்டுடியோவும், மகேஷின் குளோப் ஸ்போர்ட்டும் இணைந்து இந்த விருது வழங்கும் விழாவை இனி நடத்தும்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகும் படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும்.
இந்தியாவில் திரைப்படங்களில் வழங்கப்படும் விருதிகளில் மதிப்பு மிக்கதாக இந்த விருது திகழும் என்று சௌந்தர்யா ரஜினி தெரிவித்துள்ளார்.
"இந்திய சினிமாவில் தென்னிந்தியாவின் பங்களிப்பு மகத்தானது. புதிய திறமைகளை அடையாளம் காண்பது, ஊக்கமளிப்பது போன்றவற்றில் தென்னிந்திய சினிமா முன்னிலை வகிக்கிறது. இதனால் மேலும் ஏராளமான புதியவர்கள் இந்தத் துறைக்கு வருகிறார்கள். எங்கள் விருது முயற்சி புதிய திறமைகளை வரவேற்கும் விதமாக அமையும்", என்கிறார் சௌந்தர்யா.
இதுபற்றி மகேஷ் பூபதி கூறுகையில், "இந்திய சினிமாவின் மெக்கா என்ற பெருமை தென்னிந்திய சினிமாவுக்குதான் உண்டு. இந்த பெருமைக்குரிய துறையில் எனது பங்களிப்பும் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. சௌந்தர்யா போன்ற திறமையாளர்களுடன் கைகோர்ப்பது பெருமையாக உள்ளது" என்றார்.


Click it and Unblock the Notifications