ரஜினியின் எந்திரன் பட ஆடியோ 31ம் தேதி மலேசியாவில் வெளியீடு

எந்திரன் படத்தை பெரும் பொருட்செலவில் இயக்கியுள்ளார் ஷங்கர். ரஜினிகாந்த் வித்தியாசமான கெட்டப்களில் இப்படத்தில் தோன்றுகிறார். அவரது ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார்.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டை பிரமாண்டமான முறையில் நடத்த திட்டமிட்டு மலேசியாவில் அதை வைத்துள்ளனர். வருகிற 31ம் தேதி புத்ரஜெயா அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி இரவு 7.30 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) நடைபெறவுள்ளது.
எந்திரன் படத்துக்கான இசையை ஏ.ஆர்.ரஹ்மான் கவனித்துள்ளார். பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த், ஷங்கர், ஐஸ்வர்யா ராய் மற்றும் இந்தியத் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் இந்தப் பிரமாண்டமான நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமான முறையில் தயாராகி வருகின்றன.
More from Filmibeat
aishwarya rai இயக்குநர் ஷங்கர் எந்திரன் ஆடியோ வெளியீடு ஐஸ்வர்யா ராய் ரஜினிகாந்த் director shankar enthiran audio release rajinikanth


Click it and Unblock the Notifications











