முடிவுக்கு வந்தது மங்காத்தா ஹீரோயின் குழப்பம்!

அஜீத்தின் 50வது படம் மங்காத்தா. இதில் அவருடன் நாகார்ஜூனா, சிம்பு, ஜெய் ஆகியோரும் நடிக்கின்றனர். தமிழின் மல்டி ஸ்டார் படம் என்று கூறப்படும் மங்காத்தாவின் நாயகிகள் என்று பலரும் பேசப்பட்டார்கள்.
நீத்து சந்திரா, அனுஷ்கா இருவரும் நாயகிகள் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால் இயக்குநர் வெங்கட் பிரபு இவர்களில் யாரும் இல்லை என்று மறுத்தார். சில தினங்கள் கழித்து நீத்து சந்திரா நடிக்கவிருந்தது உண்மை என்றும், அவருக்கு சூதாட்ட புக்கிகளுடன் தொடர்பு இருந்ததால் நீக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இப்போது த்ரிஷா நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். அவருடன் லட்சுமிராய் மற்றும் வேதிகாவும் நடிக்கின்றனர். மூன்று நாயகிகளுடன் அஜீத் நடிக்கும் அதிரடி ஆக்ஷன், காமெடி, காதல் படம் இது என்கிறார் வெங்கட்பிரபு.
விரைவில் படப்பிடிப்பு துவங்குகிறது.
Comments


Click it and Unblock the Notifications