நர்த்தகியில் 100 அரவாணிகள்

தமிழகத்தின் பிரபலமான அரவாணிகளில் ஒருவரான கல்கி திரைப்படத்தில் நாயகியாக அவதாரம் எடுத்துள்ளார். அரவாணிகள் குறித்த கதையான நர்த்தகி படத்தின் நாயகியாக கல்கி நடிக்கிறார்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு செஞ்சிக் கோட்டையில் நடந்து வருகிறது. விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தில் 100 அரவாணிகள் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர்.
அரவாணிகளின் மறுபக்கத்தை சித்தரிக்கும் படமான இது அரவாணிகள் குறித்த தவறான எண்ணத்தை முழுமையாக மாற்றியமைக்கும் என்கிறார் படத்தின் இயக்குநர் விஜய பத்மா. பிப்ரவரி மாதம் இப்படம் திரைக்கு வருகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பி்ல உருவாகும் இப்படத்தை புன்னகைப் பூ கீதா தயாரிக்கிறார்.
More from Filmibeat
100 transgenders in narthagi movie அரவாணி கல்கி தமிழ் சினிமா நர்த்தகி திரைப்படத்தில் 100 அரவாணிகள் நர்த்தகி திரைப்படம் narthagi movie tamil cinema transgender kalki


Click it and Unblock the Notifications











