பிரகாஷ் ராஜூக்கு தடை நீக்கம்!

தெலுங்குப் பட உலகின் முன்னணி நடிகர் பிரகாஷ் ராஜ். ஆனால் படப்பிடிப்புக்கு உரிய நேரத்தில் வருவதில்லை மற்றும் போதிய ஒத்துழைப்பைத் தருவதில்லை என அவர் மீது நீண்ட காலமாகக் குற்றம் சாட்டப்பட்டு வந்த்து.
முன்னணி ஹீரோக்களின் படங்களும் கூட பிரகாஷ் ராஜூக்காகக் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதால், தெலுங்குப் படங்களில் நடிக்க பிரகாஷ் ராஜூக்குத் தடைவிதித்தன தெலுங்கு பிலிம்சேம்பர் மற்றும் தயாரிப்பாளர் சங்கம்.
இதைத் தொடர்ந்து கடந்த இரு மாதங்களாக அவர் புதிய தெலுங்குப் படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தார்.
இந்நிலையில், பிரகாஷ் ராஜின் பங்களிப்பு தெலுங்குப் படவுலகுக்கு எந்த அளவு முக்கியமானது என்பதை சக தயாரிப்பாளர்களுக்குப் புரிய வைத்த பிரபல தயாரிப்பாளர் ஒருவர், பிரகாஷ் ராஜ் மீதான தடையை விலக்கும் முயற்சியில் இறங்கினார்.
நேற்று முன்தினம் தெலுங்கு பிலிம்சேம்பர் அலுவலகத்துக்கு பிரகாஷ் ராஜை அழைத்து வந்த அந்த பிரபல தயாரிப்பாளர், பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களை அழைத்து பிரகாஷ் ராஜூடன் பேச வைத்தார். நடந்த விஷயங்களுக்காக அவர்களிடம் பிரகாஷ் ராஜ் வருத்தம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, இனி இம்மாதிரி நடக்காது என பிரகாஷ் ராஜ் உறுதியளித்த்தாக்க் கூறப்படுகிறது. எனவே அவர் மீதான தடையை நீக்கலாம் என பிலிம் சேம்பர் முடிவு செய்துள்ளது. விரைவில் இந்த உறுதிமொழியை எழுத்துப்பூர்வமாகக் கொடுத்துவிட்டு மீண்டும் மாட்லாடப் போகிறார் பிரகாஷ்ராஜ்!
இதான் செல்லத்துக்கு அழகு!


Click it and Unblock the Notifications











