வடிவேலுவுக்குப் பதில் விவேக்!

படிக்காதவன் படத்தில் ஆரம்பத்தில் வடிவேலுதான் புக் ஆகியருந்தார். ஹைதராபாத்தில் 2 நாள் ஷூட்டிங்கிலும் கூட கலந்து கொண்டார். ஆனால் தனக்கான காமெடி டிராக் சரியில்லை என்று கூறி ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து வாக் அவுட் செய்தார்.
வசனம் மற்றும் காட்சியமைப்புகளால் கடுப்பான வடிவேலு, இயக்குநர் சுராஜுடன் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே பஞ்சாயத்தில் இறங்கினார்.
படத்தில் வரும் ஒரு காட்சியில், ஹீரோ தனுஷ், வடிவேலுவை போட்டு அடிப்பதாக வருகிறதாம். இதுதான் வடிவேலுவை டென்ஷன் ஆக்கி விட்டது. இதெல்லாம் சீனா என்று கோபத்துடன் கூறியபடி கிளம்பிய வடிவேலு, வாங்கிய அட்வான்ஸையும் திருப்பிக் கொடுத்து விட்டார்.
இதையடுத்து தற்போது வடிவேலுவுக்குப் பதிலாக விவேக்கைப் போட்டுள்ளனராம். தனுஷுடன்,விவேக் ஜோடி சேருவது இதுவே முதல் முறை என்பதால் தனது பிசியான ஷெட்யூலுக்கு மத்தியிலும், தேதிகளை ஒதுக்கிக் கொடுத்திருக்கிறாராம் விவேக்.
தனுஷ் இதுவரை நடித்துள்ள 13 படங்களில் பெரிய காமெடியன்களுடன் நடித்ததில்லை. கருணாஸ், மயில்சாமி என அடுத்த ரேங்க் காமெடியன்களுடன்தான் கலாய்த்து வந்தார். இப்போதுதான் முதல் முறையாக பெரிய காமெடியனுடன் இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











