'சீனை' மாற்றிய வணக்கம்மா!

By Staff

Payal with Bbharathan
ராமர், அனுமாரை சர்ச்சைக்குரிய வகையிலான போஸில் சித்தரித்து போஸ்டர் அடித்து பெரும் சர்ச்சையைக் கிளப்பிய வணக்கம்மா படத்தின் யூனிட், தற்போது அந்தக் காட்சிகளை படத்திலிருந்து நீக்கி விட்டனராம்.

தென்னவன் கலைக்கூடம் சார்பில் அன்பு தென்னரசு என்ற புதிய தயாரிப்பாளர், வணக்கம்மா என்ற படத்தை தயாரிக்கிறார். சரவணன், விஷ்ணுப்ரியன், பரதன் ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். அரிராம் இயக்குகிறார்.

சரவணன், விஷ்ணுப்ரியன் ஆகிய இருவரும் ஆறு வயதில் ஒரு கொலை செய்துவிட்டு, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டவர்கள். அங்கும் ஒரு கொலையைச் செய்துவிட்டு, சென்னைக்கு தப்பி வருகிறார்கள்.

சென்னை நகர மக்களின் மனோபாவத்தை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு வீடுகளில் கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்கள் சரவணனும், விஷ்ணுப்ரியனும்.

அதன்படி, பகலில் ராமர், கிருஷ்ணர், அனுமார் போன்ற கடவுள் வேடங்களில் சென்று வீடுகளை நோட்டமிடுகிறார்கள். இரவில், அந்த வீடுகளில் கொள்ளை அடிக்கிறார்கள்.

இந்த காட்சியை மையமாக வைத்து சரவணனும், விஷ்ணுப்ரியனும் ராமர், அனுமார் வேடங்களில் நிற்பது போல், வணக்கம்மா' படத்தின் தொடக்க விழா அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டன. சென்னை நகரம் முழுவதும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன.

இதில் சித்தரிக்கப்பட்ட போஸ் பலத்த சர்ச்சையை கிளப்பியது. இந்து முன்னணியினர் போராட்டத்தில் குதித்தனர். படத்தின் தொடக்க விழா பூஜை நடைபெற இருந்த ஏவி.எம்.ஸ்டூடியோ முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக, இந்து முன்னணியினர் குவிந்தார்கள்.

இதையொட்டி ஏவி.எம்.ஸ்டூடியோவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதையடுத்து பூஜை ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் சர்ச்சைக்கு முடிவு கட்டும் வகையில் ராமர், அனுமன், கிருஷ்ணர் வேடங்களில் ஹீரோக்கள் வலம் வருவது போன்ற காட்சிகளை மாற்றி விட்டு, பகல் நேரங்களில் பூம் பூம் மாட்டுக்காரர்கள் வேடத்தில் செல்வது போல மாற்றியுள்ளனராம்.

இதையடுத்து சத்தம் போடாமல் படப்பிடிப்பை தொடங்கி நடத்தி வருகிறார்கள் வணக்கம்மா யூனிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X