அமெரிக்க குடிமகளான எனது மகளுக்கு விஜயக்குமாரால் ஆபத்து-வனிதா

இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார் வனிதா. அப்போது அவர் கூறுகையில், அருண் விஜய் என்னை காலால் உதைத்து தாக்கினார் என்று கூறியும், விஜயக்குமார் மீதும் மதுரவாயல் காவல் நிலையத்தில் நான் புகார் கொடுத்தேன். டிஜிபியிடமும் புகார் கொடுத்துள்ளேன்.
எனது புகாரை ஏற்று இதுவரை போலீஸார் விஜயக்குமார், மஞ்சுளா, அருண் விஜய்யை கைது செய்யாமல் உள்ளனர். இது ஏன் என்பதை போலீஸார் விளக்க வேண்டும்.
அருண் விஜய் அமெரிக்காவில் இருப்பதாக விஜயக்குமார் கூறுகிறார். அது சுத்தப் பொய். அவர் ஹைதராபாத்தில்தான் பதுங்கியிருக்கிறார். அவரைக் கண்டுபிடித்து போலீஸார் கைது செய்ய வேண்டும்.
எனது மகள் அமெரிக்க குடியுரிமை பெற்றவள். அவளது உயிருக்கு விஜயக்குமாரால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து அமெரிக்க தூதரகத்தை அணுகி புகார் கொடுக்கவுள்ளேன் என்றார் வனிதா.
இது குருஷேத்திரப் போர்
முன்னதாக வனிதா கூறுகையில், குடும்ப பிரச்சினைக்காக என் தந்தை கொடுத்த புகாரின் மீது வேகமாக செயல்பட்டு எனது கணவரை சிறையில் தள்ளிய போலீசார், இதுவரை நான் கொடுத்த புகாரின் மீது உரிய நடவடிக்கை நடவடிக்கையில்லை.
இது ஒரு குருஷேத்திரப் போர் என்று நான் கூறியிருந்தேன். அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
அருண் விஜய் என்னை காலால் எட்டி உதைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டினார். எனவே அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும். எனக்கு நியாயம் கிடைக்கும் என நம்பி தான் டி.ஜி.பி. லத்திகா சரணைச் சந்தித்தேன்.
என்னைப் பொறுத்தவரை இந்த பிரச்சினை இதோடு முடிந்து போகவில்லை. அருண் விஜய் மீதும், என் தந்தை மீதும் சாதாரண சட்டப் பிரிவுகளில் தான் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அரசியல்வாதிகளை தஞ்சமடைகிறார் விஜயக்குமார்
நான் கொடுத்த புகாரின் மீது மறு விசாரணை நடத்த வேண்டும். அதுவரை நான் ஓயமாட்டேன். அருண் விஜய் வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக என் தந்தையின் வழிகாட்டுதலின் படி முக்கிய பிரமுகர்களைச் சந்திக்க சென்றுள்ளார். மாமனாரின் துணையுடன் அரசியல் புள்ளிகளிடம் தஞ்சமடையப் பார்க்கிறார்.ஆனால் அவரைச் சந்திக்க எந்த அரசியல் புள்ளியும் தயாராக இல்லை. எனக்கு நியாயம் கிடைக்கும் வரை நான் ஓயமாட்டேன்.
நடிகையான எனக்கே சமுதாயத்தில் இந்த கதி என்றால் போலீசை தேடிச் செல்லும் சாதாரண மக்களுக்கு என்ன நிலை ஏற்படும். டி.ஜி.பி. யிடம் கொடுத்துள்ள புகார் மனுவை மனித உரிமை ஆணையத்திற்கும் அனுப்பி உள்ளேன். பலர் என்னை போனில் தொடர்பு கொண்டு உங்கள் கணவரை வெளியில் கொண்டு வந்து விட்டீர்களே... வாழ்த்துக்கள் என்று கூறி வருகிறார்கள்.
இத்துடன் எனக்கும் என் தந்தைக்கும் உள்ள பிரச்சினை முடிந்து விட்டதாக நான் நினைக்கவில்லை.
இனிதான் வேலையைக் காட்டுவேன்
என் கணவரை ஜாமீனில் எடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் பொறுமையாக இருந்தேன். இனி தான் என் வேலையை காட்ட போகிறேன். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன்.
விஜயகுமார் குடும்பம் பற்றிய அத்தனை உண்மைகளையும் நான் வெளியில் கொண்டுவரப் போகிறேன்...," என்று கூறியிருந்தார் வனிதா.


Click it and Unblock the Notifications











