twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வெள்ளித் திரைக்கு வரும் எழுத்தாளர் சித்ரலேகா!

    By Staff
    |

    Chitralekha
    பல தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் பாப்புலர் பிராண்டுகளுக்கு அறிமுகம் கொடுத்த பிரபல பெண் எழுத்தாளர் சித்ரலேகா இப்போது பெரிய திரையில் கால்பதிக்கிறார்.

    ஒரு குழந்தை தாயாகிறது, இருட்டுக்கு இரண்டு நிறம், அஞ்சாதே அஞ்சு, நீ எங்கே என் அன்பே போன்ற தொலைக்காட்சி தொடர்களுக்கு வசனம் மற்றும் பாடல்களை எழுதியவர் சித்ர லேகா.

    விளம்பர பட ஏரியாவில் சித்ரலேகாவுக்கு அறிமுகம் தேவையில்லை. அந்த அளவு பாப்புலர். இதயம் நல்லெண்ணெய், ராசாத்தி நைட்டிஸ், டாட்ஸ் அப்பளம், மந்த்ரா ஆயில், இதயம் வெல்த் போன்ற மிக முக்கிய விளம்பரங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதியவர்.

    தமிழகத்தின் அனைத்து வார-மாதப் பத்திரிகையிலும் இவரது சிறுகதை மற்றும் தொடர்கள் வெளியாகியுள்ளன. முன்னனி நாளிதழ்களிலும் இவரது கதைகள் வெளிவருகின்றன.

    இப்போது திரையில் தனது முதல் படத்துக்கு கதை வசனம் பாடல்களை எழுதியுள்ளார்.

    தனது முதல் படம் குறித்து சித்ரலேகா இப்படிச் சொல்கிறார்:

    "ஒரு எழுத்தாளராக மறக்கமுடியாத அனுபவங்களை நிறையப் பெற்றேன். அந்த அனுபவங்களை வைத்து அடுத்த கட்டத்துக்குச் செல்கிறேன். இயக்குநர் லேகா ரத்னகுமார் கொடுத்த தொடர்ச்சியான வாய்ப்புகள் மற்றும் ஊக்கம் என்னை நிறைய எழுதத் தூண்டியது. அவரது எல்லா விளம்பரப் படங்கள் மற்றும் தொடர்களுக்கு நான்தான் எழுத்தாளர்.

    இப்போது அவரே தயாரித்து இயக்கவிருக்கும் படத்துக்காக எனது கதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். மிக குறுகிய காலத்திலேயே முழு ஸ்கிரிப்டையும் முடித்துக் கொடுத்துவிட்டேன்.

    இந்தப் படத்தின் பாடல்களையும் நான்தான் எழுதுகிறேன். ஏற்கெனவே இசைமேதை மெல்லிசை மன்னர் எம்எஸ்வி இசையில் பாடல்கள் எழுதிய அனுபவம் இருக்கிறது. அது இந்தப் படத்துக்கு பெரிதும் கைகொடுக்கிறது, என்கிறார் சித்ர லேகா.

    இவர் ஒரு பெண் எழுத்தாளர் என்றாலும், இதுவரை இவர் எழுதியவற்றில் பெரும்பாலும் க்ரைம் தொடர்பான கதைகள்தான்.

    ஏன் அப்படி?

    "வழக்கமான கதைகள், சூழலிருந்து மாறுபட்டு சுவாரஸ்யமாக தரவேண்டும் என்பதே. மேலும், நானாக வலிந்து போய் இம்மாதிரி கதைகளை எழுதவில்லை. சூழல் அப்படி அமைந்துவிட்டது. அந்தப் பாணி எனக்கும் வெற்றியைத் தந்ததால், தொடர்கிறேன். மற்றபடி எந்தமாதிரி கதையாக இருந்தாலும் அதில் 100 சதவிகித முழு ஈடுபாட்டைக் காட்டுவது எனது வழக்கம்", என்கிறார் சித்ரலேகா.

    வாழ்த்துக்கள்!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X