துபாய் சர்வதேச திரைப்பட விழா போட்டிக்கு 'யோகி' தேர்வு!

இந்த நிலையில் அந்தப் படம் துபாயில் நடக்கவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஆசிய - ஆப்ரிக்க பிரிவில் யோகி மோதுகிறது. இந்தப் பிரிவில் 25 திரைப்படங்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கென அமைக்கப்பட்டுள்ள நடுவர் குழு விருதுக்கான படங்களைத் தேர்வு செய்யும். டாக்குமெண்டரி மற்றும் குறும்படங்களுக்கும் தனித்தனி போட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
திரைப்படப் பிரிவில் வெற்றிபெறும் படத்துக்கு முதல் பரிசு 50 ஆயிரம் டாலர்கள் வழங்கப்படும். நடுவர் சிறப்பு விருது பெறும் படத்துக்கு 40 ஆயிரம் டாலர் கிடைக்கும்.
நாளை நடக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த போட்டி மற்றும் அதற்கு யோகி தேர்வான விதம் பற்றி விளக்குவதாக அறிவித்துள்ளார் இயக்குநர் அமீர்.
Comments


Click it and Unblock the Notifications