சா..பூ..த்ரீ.. 12 இடங்களில் கட்!

திரைப்படங்களில் கள்ளக்காதல் உறவுகளை சர்வ சாதாரணமாக சித்தரிப்பது அதிகரித்து விட்டது. இதேபோல டிவி சீரியல்களிலும் கூட இதுபோன்ற காட்சிகள் பெருகி விட்டன.
இந்த நிலையில் புதுமுகங்கள் நடித்துள்ள சா பூ த்ரீ என்ற படத்தில், திருமணமான பெண்ணை படத்தின் ஹீரோ காதலிப்பது போல காட்சி வைத்துள்ளனர். அந்தப் பெண்ணை அடைய ஹீரோ முயற்சிக்கிறாராம்.
படத்தை முடித்து சென்சார் போர்டுக்கு சர்டிபிகேட்டுக்காக அனுப்பி வைத்தனர். படத்தை பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள், திருமணமான பெண்ணை ஹீரோ அடைய முயலும் காட்சிகளை கடுமையாக ஆட்சேபித்துள்ளனர். இவற்றையெல்லாம் வெட்டியாக வேண்டும் என்று கூறி விட்டனர்.
இதையடுத்து 12 காட்சிகளை வெட்ட வேண்டி வந்ததாம். அவற்ற வெட்டிய பின்னர் படத்துக்கு ஏ சான்றிதழ் ( வயது வந்தோர் மட்டுமே பார்க்க முடிகிற படம்) கொடுத்ததாம் சென்சார் போர்டு.
இந்தப் படத்துக்கு ஐந்து ஹீரோயின்கள், 3 ஹீரோக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











