'ஹோம்லி'யும் ஓகே.. அம்ரிதா ராவ்

பாலிவுட்டில் எந்தப் படமாக இருந்தாலும் அதில் கவர்ச்சி இருந்தாக வேண்டும். இல்லாவிட்டால் ஏதோ வேற்றுகிரக வாசிகளைப் போல பார்ப்பார்கள். இப்படிப்பட்ட நிலையில் அடக்க ஒடுக்கமாக நடித்தாலும் அது ரசிக்கப்படும் என்கிறார் அம்ரிதா ராவ்.
இஷ்க் விஷ்க், விவாஹ் உள்ளிட்ட படங்களில் அபாரமான நடிப்பினால் கவர்ந்தவர்தான் அம்ரிதா ராவ்.
கவர்ச்சி குறித்து அவர் விளக்குகளையில், ஆடைக்குறைப்பால்தான் ரசிகர்களைக் கவர முடியும் என்றில்லை. என்னைப் போன்ற அடுத்த வீட்டுப் பெண் தோற்றத்தில் உள்ளவர்களாலும் ரசிகர்களைக் கவர முடியும்.
எனக்கு கவர்ச்சிகரமான உடல் வாகு, முகவாட்டம் இல்லைதான். இருந்தாலும் அதற்காக நான் வருத்தப்படவில்லை. என்னைப் போன்ற நடிகைகளும் கூட ஹாட் நடிகைகள் என்ற பெயரை பெற முடியும். எனது எல்லாப் படங்களிலும் நான் இப்படியேதான் நடிக்கப் போகிறேன் என்கிறார் அம்ரிதா.
தொடர்ந்து அவர் கூறுகையில், தியேட்டரில் படம் பார்க்க வரும் பாந்தமான, குடும்பப் பாங்கான பெண்களுக்கு நம்மைப் போலவே இருக்கிறாரே என்ற எண்ணம் என்னைப் பார்க்கும் போது நிச்சயம் வரும். அதுதான் எனது வெற்றி. அப்படிப்பட்ட பெண்கள், ரசிகர்கள் மத்தியில் என்னைப் போன்றவர்களுக்கு நிச்சயம் ஹிட் கிடைக்கும் என்கிறார் அம்ரிதா.
அம்ரிதா நடித்து சமீபத்தில் வெளியான வெல்கம் டூ சஜ்ஜன்பூர் வெற்றிகரமாக ஓடுவதில் அம்ரிதாவுக்கு மனசு கொள்ளாத மகிழ்ச்சியாம். நவீனத்துவம், உலகமயமாக்கல் போன்ற எந்த மாடர்ன் சிந்தனைகளும் உள்ளே புகாத கிராமத்தில் நடக்கும் கதைதான் இப்படத்தின் கரு.
ஷ்ரேயாஸ் தல்படே நாயகனாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷியாம் பெனகல் இயக்கியுள்ள படம் இது.
வெல்கம் டூ சஜ்ஜன்பூர் வெற்றிகரமாக ஓடுவதில் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இந்த எம்.டிவி. காலத்தில், ரசிகர்கள், எங்களைப் பார்த்தும் சந்தோஷப்படுவது உண்மையிலேயே மகிழ்ச்சியாக உள்ளது. இப்படிப்பட்ட படங்களுக்கும் மக்கள் வரவேற்பு தருவார்கள் என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம், மற்றவர்களுக்கும் நிரூபித்துள்ளோம்.
படத்தைப் பார்க்க மக்கள் அலைமோதுவதை பெருமையாக கருதுகிறோம் என்றார்.


Click it and Unblock the Notifications











