அபிராமி ராமநாதன் 62!

விக்ரம் நடிப்பில் கலைப்புலி தாணு தயாரித்து சமீபத்தில் ரிலீசான கந்தசாமி படத்தின் சென்னை மாநகர உரிமையைப் பெற்றிருப்பவர் ராமநாதன். ரஜினியின் சிவாஜி படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிட்டு சாதனை படைத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
62-வது பிறந்தநாள் கொண்டாடிய அவருக்கு திரையுலகப் பிரமுகர்கள் நேரிலும் தொலைபேசியிலும் வாழ்த்துக்களைக் கூறினர்.
தனது மனைவியும் அபிராமி மெகாமாலின் செயல் இயக்குநருமான நல்லம்மை ராமநாதன், மகன் சிவலிங்கம், மகள் மீனாட்சி, மருமகன் பெரியகருப்பன், மருமகள் ஜமுனா சிவலிங்கம் மற்றும் பேரன் பேத்திகளுடன் கேக் வெட்டி தனது பிறந்த நாளை அவர் கொண்டாடினார்.
பொதுவாக பிறந்த நாளை பெரிதாகக் கொண்டாடுவதில்லை என்றும் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வற்புறுத்தலுக்காகவே இந்த எளிய நிகழ்ச்சி என்றும் ராமநாதன் தெரிவித்தார்.
பிறந்தநாள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அவரது மக்கள் தொடர்பாளர் ஆதம்பாக்கம் ராமதாஸ் செய்திருந்தார்.


Click it and Unblock the Notifications











