ஆசையால் டைரக்டர் ஆனேன்- அபிஷேக்

By Staff

Abishek in Mogamul
எல்லா நடிகர்களுக்கும் டைரக்டராகும் ஆசை இருக்கும். எனக்கும் இருந்தது. அதுவே இப்போது நான் டைரக்டராக மாறக் காரணம் என்கிறார் அபிஷேக்.

மோகமுள் படம் மூலம் நடிகரானவர் அபிஷேக். பின்னர் டிவி சீரியல்கள் பக்கம் திரும்பி விட்டார். டிவியில் கதாநாயகனாக வலம் வந்த அவர் கோலங்கள் மெகா சீரியல் மூலம் பிரபலமானார்.

தற்போது கோலிவுட் இயக்குநர்கள் வரிசையில் அபிஷேக்கும் இணைந்து விட்டார். கதை படம்தான் அபிஷேக் டைரக்டராகும் முதல் படம்.

எப்படி டைரக்டரானீர்கள் என்று கேட்டால்,
எல்லா நடிகர்களுக்கும் ஒரு காலகட்டத்துக்குப்பின், டைரக்டர் ஆகவேண்டும் என்ற ஆசை இருக்கும். நான் மும்பையில் இருந்தபோது, சில நாடகங்களை இயக்கி இருக்கிறேன். அந்த அனுபவத்தில், 6 வருடங்களுக்கு முன்பு சினிமாவுக்காக ஒரு கதை எழுதினேன்.

நல்ல தயாரிப்பாளர் கிடைக்க வேண்டும் என்று காத்திருந்தேன். ராஜன் ராதாகிருஷ்ணன் என்ற அற்புதமான தயாரிப்பாளர் கிடைத்தார். இவர், நந்தா, மவுனம் பேசியதே ஆகிய வெற்றி படங்களை தந்தவர்.

சமுதாயத்தில் அன்றாடம் நடக்கிற சம்பவங்கள்தான் கதை படத்தின் கதை. இந்த கதை பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெறும். ஒரு பெண் டைரக்டரிடம் இருந்து வரவேண்டிய கதை இது. இந்த படம் வந்தபின், தமிழ்நாட்டில் தற்கொலைகள் குறையும் என்றார் அபிஷேக்.

அப்படியானால் சரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X