ஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை

நடிகை வனிதாவுக்கும், அவரது தந்தை நடிகர் விஜயகுமாருக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து தனது மகன் விஜயஸ்ரீஹரியை முன்னாள் கணவர் ஆகாஷிடம் விட்டார். பின்னர் வனிதா அழைத்தபோது மகன் செல்ல மறுத்துவிட்டான்.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இறுதியில் விஜயஸ்ரீஹரியை வார இறுதியில் வனிதாவிடம் விட நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் மகனைப் பார்க்கச் சென்றபோது முன்னாள் கணவர் ஆகாஷ் தன்னை அடித்ததாக வனிதா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் ஆகாஷ் நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கவில்லை என்றும், மகனை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டதற்கு தன்னை அவர் அடித்து உதைத்ததாகவும் கூறியுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இது குறித்து ஆகாஷ் கூறியதாவது,
விஜயஸ்ரீஹரி வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த வனிதா தன்னுடன் வரும்படி அவனை இழுத்தார். அதற்கு அவன் கூச்சலிட்டு அவருடன் செல்ல மறுத்துவிட்டான். நீதிமன்ற உத்தரவை பின்பற்ற நான் தயாராகத் தான் இருக்கிறேன்.
வனிதா வீட்டில் தந்தை என்ற பெயரில் வேறொருவரை ஏற்க என் மகனுக்கு விருப்பமில்லை. அதனால் அவன் வனிதாவுடன் செல்ல மறுக்கிறான். நான் வனிதாவை அடிக்கவேயில்லை என்றார்.


Click it and Unblock the Notifications











