கேசட் விற்பனையில் 'கேப்டன்' ரெக்கார்ட்!

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டின் முதல் நாளிலேயே ஒன்றரை லட்சம் கேசட் மற்றும் சிடி விற்பனை செய்யப்படவுள்ளது. தமிழ்த் திரையுலகில் இது புதிய சாதனை என்கிறார்கள்.
விஜயகாந்த்தின் 150வது படம்தான் அரசாங்கம். அவரது மைத்துனர் சுதீஷ்தான் தயாரித்துள்ளார். மாதேஷ் இயக்கியுள்ளார். விஜயகாந்த்துக்கு ஜோடியாக நவ்னீத் கெளர்-ஷெரில் பின்டோ என இரு கவர்ச்சி குண்டுகள் நடித்துள்ளன.
படப்பிடிப்பின் பெரும் பகுதி கனடாவிலேயே நடத்தப்பட்டது. படத்தின் ஆடியோ வருகிற 28ம் தேதி உலகளாவிய அளவில் வெளியிடப்படுகிறது.
ஆடியோ வெளியீட்டை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்த தயாரிப்பாளர் சுதீஷ் இதற்காக வித்தியாசமான ஒரு வழியைத் தேர்வு செய்தார். அதாவது சென்னையில் மட்டும் விழாவை நடத்தாமல், மாவட்டத் தலைநகரங்களில் ஆடியோ வெளியீட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
ரிதம் மியூசிக் நிறுவனம் ஆடியோவை வெளியிடுகிறது. ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.
ரிதம் மியூசிக் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான ராமானுஜம் இந்த சாதனை குறித்து கூறுகையில், 1.50 ஆடியோ சிடி மற்றும் கேசட்டுக்களை ஒரே நாளில் விற்பனை செய்வது என்பது லேசுப்பட்ட காரியம் இல்லை. இது மிகப் பெரிய சாதனையாகும். முதல் நாளிலேயே இத்தனை கேசட்டுகளும், சிடிக்களும் விற்பனையாளர்களிடம் வழங்கப்பட்டு விடும்.
இது கட்சி விழாவாகவும் இப்போது மாறியுள்ளது. தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் ஆடியோ வெளியீட்டுக்குத் தயாராகி வருகின்றனர்.
இவர்கள் மூலமாக ஆடியோ சிடிக்களும், கேசட்டுகளும் விற்பனை செய்யப்படவுள்ளது. இதுதவிர நேரடியாக 50 ஆயிரம் சிடிக்கள் கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படும்.
மேலும், மாவட்டஅளவில் கேசட் வெளியீடு என்பது இதுவரை நடந்திராத ஒன்று. அந்தமான் நிக்கோபார் தீவிலிருந்து கூட 350 சிடிக்கள் கேட்டு ஆர்டர் வந்துள்ளது. அந்தமானிலிருந்து இவ்வளவு பெரிய ஆர்டர் வந்துள்ளது இதுவே முதல் முறை என்றார்.
விஜயகாந்த்தின் 'அரசாங்கத்திற்கு' முதல் ரவுண்டிலேயே வெற்றி!


Click it and Unblock the Notifications











