ஹேமா-தர்மேந்திரா கணவன்-மனைவியா?

இதுகுறித்து சுபாஷ் அகர்வால் என்பவர் மத்திய தகவல் ஆணையத்திற்கு ஒரு மனுவை அனுப்பியுள்ளார். அதில், பீகானிர் தொகுதி பாஜக எம்.பியான தர்மேந்திராவின் மனைவி பிரகாஷ் தியோல் என லோக்சபா ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஹேமமாலினி ராஜ்யசபாவில் தாக்கல் செய்துள்ள ஆவணங்களில் தனது கணவர் தர்மேந்திரா தியோல் என குறிப்பிட்டுள்ளார்.
இரு அவைகளிலும் இரு மாதிரியான தகவல்கள் ஒரே நபர்கள் குறித்து கூறப்பட்டுள்ளது. இது முரண்பாடாக உள்ளது.
இதுகுறித்து நான் இரு அவைகளுக்கும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்டபோது எனக்கு முரண்பாடான பதில்களே வந்துள்ளது.
எனவே ஹேமமாலினியும், தர்மேந்திராவும் கணவன், மனைவியா, இருவரும் கல்யாணம் செய்து கொண்டார்களா என்பதை விளக்க வேண்டும். அது உண்மையாக இருந்தால் இதுகுறித்து உண்மையான தகவல்களை ஆவணங்களில் இடம் பெற உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.


Click it and Unblock the Notifications











