'தி லைட்னிங் ஸ்ட்ரைக்ஸ்'!

இந்த நிறுவனத்தின் துவக்க விழா, நேற்று ஞாயிற்றுக் கிழமை சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது.
இதற்கு முன் மின்னல் காட்சிகளை காட்ட வேண்டும் என்றால், சும்மா சவுண்ட் விட்டுக் கொண்டிருப்பார்கள். எப்போதோ இந்திய நியூஸ் ரீலில் காட்டிய மின்னல் காட்சிகள் மங்கலாகக் காட்டுவார்கள். கம்ப்யூட்டர் வந்த பிறகு கிராபிக்ஸில் காட்டிப் பார்த்தார்கள். ஆனால் அவையெல்லாம் தத்ரூபமான எபெக்டைத் தரவில்லை.
'இதையெல்லாம் ஒரு சினிமா ரசிகனா நான் ஆரம்பத்திலேருந்து கவனிச்சிட்டு வர்றேன். எனவேதான் ஹாலிவுட்டிலிருந்து இந்த விளக்குகளை மிகுந்த பொருட் செலவில் வாங்கியிருக்கிறோம். இந்த ஐடியாவுக்கு சொந்தக்காரர் நீரவ்ஷாதான்,' என்றார் ஆர்யா.
அதே போல, பயங்கரமான குண்டு வெடிப்பதைப் போன்ற காட்சிகளில், அந்த ஒரிஜினல் எபெக்டைத் தரும் வகையிலான விளக்குகளும் இவர்களிடம் கிடைக்குமாம்.
இந்த விளக்குகளை குறைந்தபட்சம் 3 நாட்கள் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். மூன்று நாட்கள் என்பது ஒரு வாரம் வரை கூட பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் அதே வாடகைதான். ஹாலிவுட்டில் பின்பற்றப்படும் முறை இது.
இந்த நிகழ்ச்சியில் லைட்னிங் ஸ்ட்ரைக்ஸ் எனும் மின்னல் சாதனத்தை உருவாக்கிய டேவிட் பிரிங்கிள் வந்திருந்தார். இந்த உபகரணங்களின் முக்கியத்துவம், எளிமையான பயன்பாடு பற்றியெல்லாம் விளக்கினார். ட்விஸ்டர், தி பிரஸ்டீஸ் போன்ற ஹாலிவுட் படங்களில் இந்த சாதனங்கள் மூலம்தான் மின்னல் எபெக்ட் தந்தார்கள்.
விழாவுக்கு பாலுமகேந்திரா, பிரபுதேவா, விஷ்ணுவர்த்தன், மிஷ்கின், பாலாஜி சக்திவேல் மற்றும் ஏராளமான ஒளிப்பதிவாளர்கள் பங்கேற்றனர்.


Click it and Unblock the Notifications











