தப்பினார் நடிகை சுசித்ரா

பிரபல பாலிவுட் நடிகை சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி. இரு தினங்களுக்கு முன் மகாராஷ்ட்ர தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மாலிக் ஒரு தகவலை வெளியிட்டார். பிரபல இயக்குநர் சோகர் கபூரின் முன்னாள் மனைவி இவர்.
நடிகைகள் சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி மற்றும் லக்ஷ்மி ஆகியோர் மீது, குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியது மற்றும் துன்புறுத்தியது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் போதிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் மாலிக்கை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார் சுசித்ரா.
இந்த சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் மாலிக், சுசித்ரா மீது எந்த வழக்கும் இல்லை என்றார் தடாலடியாக.
2007-ம் ஆண்டு சுசித்ராவின் தாய் சுலோசனா மீது சிறுவர்களை வேலைக்கு அமர்த்தியது தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், ஆனால் அந்த வழக்கும் பின்னர் கைவிடப்பட்டதாகவும் கூறிய அமைச்சர், சுசித்ரா நிரபராதி என்றார்.
இதௌத் தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய சுசித்ரா, "என் வீ்ட்டில் ஒரு சிறுமி இருந்தது உண்மைதான். ஆனால் அவரது தாயார் சில தினங்களுக்கு அந்த சிறுமையை பார்த்துக் கொள்ளும்படி எங்களிடம் கேட்டுக் கொண்டதாலேயே வீ்ட்டில் வைத்திருந்தோம்... அது கூட இங்கல்ல, என் அம்மா வீட்டில்" என்றார்.


Click it and Unblock the Notifications











