கமல் விழாவைப் புறக்கணித்த 'அம்மா'வுக்கு வினயன் கண்டனம்!

By Chakra

Director Vinayan
திருவனந்தபுரம்: கமல்ஹாஸனுக்கு கேரள அரசால் நடத்தப்பட்ட பாராட்டு விழாவைப் புறக்கணித்த மலையாள நடிகர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் பிரபல இயக்குநர் வினயன்.

நடிகர் கமல் ஹாசனின் 50 வருட கலைச்சேவையை கவுரவிக்கும் வகையில், அவருக்கு கேரள அரசாங்கம் பாராட்டு விழா நடத்தியது. திருவனந்தபுரத்தில், கடந்த 22-ந் தேதி இந்த விழா நடைபெற்றது.

அதில் முதல்வர் அச்சுதானந்தன், கல்வி மந்திரி பேபி உள்பட ஏராளமான அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். அந்த விழாவில், மலையாள நடிகர்-நடிகைகள் யாரும் கலந்துகொள்ளவில்லை. மலையாள நடிகர் சங்கமான 'அம்மா' என்ற அமைப்பு, அந்த விழாவைப் புறக்கணித்துவிட்டது. 50 ஆண்டு கலைச் சேவை செய்த மலையாள நடிகர்களுக்குப் பாராட்டு விழா எடுக்காமல் கமலுக்கு விழா எடுப்பதா என்று கேட்டது அந்த அமைப்பு.

என்றாலும் மலையாள பட அதிபர்கள், வினியோகஸ்தர்கள் திரளாக விழாவில் கலந்துகொண்டார்கள். கமல்ஹாசனுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்கள்.

இயக்குநர் வினயன் கண்டனம் :

அம்மாவின் இந்த செயலுக்கு பிரபல மலையாள இயக்குநர் வினயன் (காசி பட இயக்குநர்) கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "கமல்ஹாசன், மூன்று முறை தேசிய விருது பெற்றவர். அனைத்து தரப்பினராலும் விரும்பி நேசிக்கப்படுகிற மிக சிறந்த நடிகர். மலையாள பட உலகம் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். ஆரம்ப காலத்தில் 60-க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்து இருக்கிறார்.

தன்னை அடையாளம் காட்டியது மலையாள பட உலகம்தான் என்பதை அவர் எல்லா மேடைகளிலும் சொல்லி வருகிறார்.

அப்படிப்பட்ட ஒப்பற்ற ஒரு நடிகருக்காக நடந்த விழாவை, மலையாள நடிகர் சங்கம் (அம்மா) வேண்டுமென்றே புறக்கணித்துள்ளது. தனது எதேச்சாதிகாரப் போக்கைத் தொடர்கிறது. எனவே, அந்த அமைப்பை கலைக்க வேண்டும்...,'' என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X