திரும்பி வந்த ஷாஜி!

By Staff

Ellam Avan Seyal movie stills

மலையாளத்தில் முன்னணியில் உள்ள இயக்குநர்களில் ஒருவரான ஷாஜி கைலாஷ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு எல்லாம் அவன் செயல் மூலமாக தமிழுக்குத் திரும்பியுள்ளார்.

அடிதடி படங்களுக்குப் பெயர் போனவர் ஷாஜி. மலையாளத்தில் ஆக்ஷன் படங்கள் நிறைய எடுத்தவர். தமிழிலும் விஜயகாந்த்தை வைத்து வாஞ்சிநாதன் உள்ளிட்ட சில படங்களைக் கொடுத்தவர் அவர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'எல்லாம் அவன் செயல்' மூலமாக தமிழுக்கு திரும்பி வந்துள்ளார் ஷாஜி.

மலையாளத்தில் அவர் இயக்கிய சிந்தாமணி கொல கேஸ் படத்தைத்தான் அப்படியே தமிழில் ரீமேக் ஆக்கியுள்ளார் ஷாஜி.

என்.ஆர்.ஐ. தொழிலதிபரான ஆர்.கே. இப்படத்தின் மூலம் நாயகனாகியுள்ளார். ஆனால் சினிமாவுக்கு இவர் புதிதல்ல. தூண்டில் படத்தில் நடித்துள்ளார். விநியோகஸ்தராகவும் இருந்துள்ளார்.

சங்கிலி முருகனின் அழகர் மலை படத்தின் நாயகனும் இவர்தான்.

படத்தின் நாயகி பாமா. இவர் மலையாளத்து மல்லிகை. தமிழுக்கு வருகை தரும் தாமரை.

படத்தில் வடிவேலு முக்கிய கேரக்டரில் வருகிறார். வக்கீலாக காமெடிக் களேபரம் செய்கிறார். நாசர், மனோஜ் கே.ஜெயன், சோனியா, மணிவண்ணன், விஜயக்குமார் என ஏகப்பட்ட நட்சத்திரங்களும் படத்தில் ஜொலிக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X