பொது இடத்தில் லிப் டு லிப்: தீபிகா படுகோன் மீது போலீசில் புகார்!

By Shankar

Sidhard Mallaya and Deepika Padukone
சென்னை: விஜய் மல்லையா மகனுடன் கிரிக்கெட் மைதானத்தில் லிப் டு லிப் கிஸ் அடித்து பரபரப்பேற்படுத்திய நடிகை தீபிகா படுகேன் மீது சென்னை போலீசில் புகார் கொடுத்துள்ளது இந்து மக்கள் கட்சி.

அக்கட்சியின் மாநில செயலாளர் பி.ஆர். குமார் திருவல்லிக்கேணி போலீசில் நடிகை தீபிகா படுகோனே மீது இன்று புகார் அளித்தார்.

அதில், "நடிகை தீபிகா படுகோனே பொது இடங்களில் கலாச்சாரத்துக்கு எதிராகவும் அறுவறுக்கத்தக்க ஆபாச செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் பெங்களூரில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூர் ராயல் சேலஞ்ச் அணி வெற்றி பெற்றது. அப்போட்டியை காண வந்திருந்த தீபிகா படுகோனே அணியின் தலைவர் சித்தார்த் மல்லையாவை உதட்டோடு உதடு முத்தமிட்டார்.

மைதானத்தில் இக்காட்சியை கண்டவர்கள் அதிர்ச்சியானார்கள். இது இந்திய கலாச்சாரத்துக்கு விரோதமாகவும் பெண்மையை சீரழிக்கும் வகையிலும் இருந்தது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பெங்களூர் ராயல் சேலஞ்ச் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டியை காண தீபிகா படுகோனே வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சேப்பாக்கம் மைதானத்திலும் தீபிகா படுகோனே ஆபாசமாக நடந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இது இந்திய தண்டனை சட்டப்படி குற்றம். பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொள்ளும் தீபிகா படுகோனேவை சேப்பாக்கம் ஸ்டேடியத்துக்குள் அனுமதிக்கக்கூடாது," என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X