3 மொழிகளிலும் 'களவாணி'!

By Sudha

ஓவியாவுக்கு சூப்பர் நேரம். அவருக்குப் பெரும் பெயர் வாங்கித் தந்த களவாணி படத்தை இப்போது தெலுங்கிலும், கன்னடத்திலும் ரீமேக் செய்கின்றனர். இதில் என்ன விசேஷம் என்றால், இந்த இரண்டிலும் கூட ஓவியாதான் நாயகியாம்.

களவாணி படத்தில் நடித்து அறிமுகமானவர் மலையாளத்து ஓவியா. முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்தவர். இதனால் தமிழ் சினிமாவில் இவருக்கு செம கிராக்கி ஆனது. ஆனாலும் அந்த கிராக்கியை சரிவர பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டதாலோ என்னவோ ஓவியாவைத் தேடி வாய்ப்புகள் பல வந்தும் கூட படங்கள் அமையாமல் போய்க் கொண்டிருக்கிறது.

பல படங்களை ஓவியாவே நிராகரித்து விட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் அவரது செட் நடிகையான அமலா பால், இப்போது அமோகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார். விக்ரம் ரேஞ்சுக்கு அமலா போய் விட்டார்.

இந்த நிலையில் ஓவியாவுக்கு புது ரூட் கிடைத்துள்ளது. அதாவது தெலுங்கிலும், கன்னடத்திலும் அவருக்கு புதிய பாதை கிடைத்துள்ளது. இந்த இரு மொழிகளிலும் களவாணி படத்தை ரீமேக் செய்யவுள்ளனர். இரண்டிலும் ஓவியாவையே நாயகியாக புக் செய்துள்ளனராம்.

இந்த இரு மொழிப் படங்களிலும் தனக்கு நல்ல வரவேற்பு கிடைத்தால் மாறி மாறி கன்னடத்திலும், தெலுங்கிலுமாக நடிக்க முடிவு செய்துள்ளாராம் ஓவியா.

அது சரி, தமிழ் ஏன் ஓவியாவுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்றுதான் தெரியவில்லை!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X