தெலுங்கில் 'ரங்கம்' ஆகும் கோ!
ஜீவா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியாக வெற்றி பெற்றுள்ள கோ திரைப்படம் தெலுங்கில் ரங்கம் என்ற பெயரில் டப் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் ரிலீசான தமிழ்ப் படங்களிலேயே பெரும் வெற்றியைப் பெற்றுள்ள படமாக கோ - வை விநியோகஸ்தர்கள் அறிவித்துள்ளனர்.
இந்தப் படத்தை தெலுங்கிலும் டப் செய்துள்ளனர். தெலுங்கில் ரங்கம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் அதிக திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர் ஆர்எஸ் இன்போடைன்மெண்ட் நிறுவனத்தினர்.
ஹீரோ ஜீவா, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் போன்றவர்கள் தெலுங்கு ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர்கள் என்பதாலும், கேவி ஆனந்தின் முந்தைய படம் அயன், தெலுங்கில் ஓரளவு நன்கு ஓடியதாலும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications