விவேக்..குஷ்பு..'பூச்சிபாலு'!!

விவேக் கதாநாயகனாக நடித்துள்ள முதல் படம் சொல்லி அடிப்பேன் இதோ அதோ என இழுத்துக் கொண்டிருக்கும் நிலையில், அவரை மீண்டும் நாயகனாகப் போட்டு படமெடுக்கும் தைரியசாலி யார் என்றுதானே கேட்கிறீர்கள். அவர் வேறு யாருமல்ல, 'கருத்து' புகழ் குஷ்புதான்.
விரைவில் துவங்கவிருக்கும் இந்தப் படம் குறித்த மற்ற தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளனவாம்!
இந்தப் படத்துடன் ஐந்தாம் படை எனும் பெயரில் இன்னொரு படத்தையும் குஷ்பு தயாரிக்கப் போகிறார். அதில் கதாநாயகன் அவரது கணவர் சுந்தர் சி. இவருடன் மேலும் நான்கு ஹீரோக்கள் இப்படத்தில் உண்டாம்.
வீராப்பு படத்தை இயக்கிய பத்ரிதான் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் மொத்தம் 5 கதாநாயகிகளாம்.
சூப்பர்ப்பு!
Comments


Click it and Unblock the Notifications