தாலி கட்டாமல் குடித்தனம்-கர்ப்பம் - டிவி காம்பியரின் சோகம்!

கலாச்சரத்தை பாழ்படுத்தி வரும் தாலி கட்டாமல் சேர்ந்து வாழும் முறை மூலம், தனது காதலருடன் தாலி கட்டாமல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்த டிவி தொகுப்பாளினி ஒருவர் இப்போது கர்ப்பமாகி நிற்கிறார். அவரை கைவிட்ட காதலரை போலீஸார் பெண்கள் வன் கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

சென்னை அசோக் நகரைச் சேர்ந்தவர் நளினி. 31 வயதாகும் இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் காம்பியராக இருக்கிறார். இவரும் கார்த்தீசன் என்பவரும் காதலித்து வந்தனர்.

இந்தக் காதல் முற்றி, கல்யாணம் செய்யாமல் கணவன், மனைவியாக சேர்ந்து வாழ ஒப்புக் கொண்டு ( லிவிங் டுகெதர்) தனி வீடு ஒன்றில் வசித்து வந்தனர்.

இந்த வாழ்க்கையில், ஒரு முறை கர்ப்பமானார் நளினி. பின்னர் அதை கார்த்தீசன் ஆலோசனையின் பேரில் கலைத்து விட்டார்.

இந்த நிலையில் முறைப்படி கல்யாணம் செய்து கொண்டு வாழலாமே என்று கார்த்தீசனை வற்புறுத்தத் தொடங்கினார் நளினி. ஆனால் அதை ஏற்க மறுத்து விட்டார் கார்த்தீசன். அத்தோடு நில்லாமல், வரதட்சணை கொடுத்தால்தான் கல்யாணம் என்றும் கூறி விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்தார் நளினி. நேற்று இரவு தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு புலம்பியபடி வந்த அவர் என்னுடன் குடும்பம் நடத்தி, கர்ப்பிணியாக்கி விட்டு, இப்போது கல்யாணம் செய்ய மறுப்பதாக காதலர் மீது புகார் கொடுத்தார்.

இதையடுத்து பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கார்த்தீசனை போலீஸார் கைது செய்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X