மோகன்லால் மேஜிக் ரத்து

நெருப்பு வளையத்திற்குள்ளிருந்து வெளியே வரும் சாகச மேஜிக் நிகழ்ச்சியை தான் நடத்தப் போவதாக மோகன்லால் சிலநாட்களுக்கு முன்பு அறிவித்தார். இன்று திருவனந்தபுரத்தில் அந்த சாகசத்தை நிகழ்த்துவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்த சாகசத்தை பிரபல மேஜிக் கலைஞர் கோபிநாத் முட்டுக்காட்டிடம் 2 வருடங்ளாக பயின்று வருவதாகவும் அவர் கூறியிருந்தார். மோகன்லாலின் இந்த அறிவிப்புக்கு நூற்றுக்கணக்கான மேஜிக் கலைஞர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இது மிகவிம் விபரீதமானது, விளம்பரத்திற்காக மோகன்லாலைப் பயன்படுத்திக் கொள்கிறார் கோபிநாத் என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்த சாகசத்தை கைவிட வேண்டும் என்றும் மோகன்லாலை அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து தனது சாகச நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டார் மோகன்லால். இதை கோபிநாத்துடன் இணைந்து செய்தியாளர்களிடம் மோகன்லாலே நேரடியாக தெரிவித்தார்.
தனது தாயார், ரசிகர்கள், மலையாள நடிகர் சங்கம் ஆகியோர் இந்த மேஜிக் நிகழ்ச்சிக்கு ஆட்சேபனை தெரிவித்ததாலும், விபரீதம் வேண்டாம் என கேட்டுக் கொண்டதாலும் இந்த நிகழ்ச்சியை தான் செய்யப் போவதில்லை என்று மோகன்லால் தெரிவித்தார்.
முன்னதாக மலையாள நடிகர் சங்கத் தலைவர் இன்னொசன்ட் செய்தியாளர்களிடம் கூறுகையில், மோகன்லால் ஒரு தனி நபர் அல்ல. அவர் மலையாள திரையுலகின் சொத்து. கேரள மக்களுக்குச் சொந்தக்காரர். எனவே இப்படிப்பட்ட விபரீதமான சாகசத்ைத செய்ய அவருக்கு உரிமை இல்லை.
எனவேதான். அனைவரும் திரண்டு எங்களது ஆட்சேபத்தைத் தெரிவித்தோம். அதை அவரும் ஏற்றுக் கொண்டார். இது மகிழ்ச்சி தருகிறது என்றார் இன்னொசன்ட்.


Click it and Unblock the Notifications











