மோனிகா பேடி என் மனைவி: அபு சலீம் வாக்குமூலம்

மோனிகா எனது மனைவி என்று அபு சலீம் சொல்வதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது.
கலர்ஸ் டிவி நடத்தி வரும் பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் மோனிகா பேடியும், மறைந்த பிரமோத் மகாஜனின் மகன் ராகுல் மகாஜனும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த ஷோவின்போது, மோனிகாவிடம், நான் உங்களை விரும்புகிறேன் என்று ராகுல் கூறியதாக செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து ராகுல் மகாஜன் ஷோவிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்த செய்தியால் மனம் உடைந்தார் அபு சலீம். இதைத் தொடர்ந்தே டெல்லி கோர்ட்டுக்கு அவர் கொண்டு வரப்பட்டபோது, மோனிகா எனது மனைவி என்று அவர் தெரிவித்தார்.
போர்ச்சுகல் நாட்டில் வைத்து கைது செய்யப்பட்ட அபு சலீமும், மோனிகாவும் பின்னர் இந்தியா கொண்டு வரப்பட்டனர். மோனிகா மீது தொடரப்பட்ட இரு பாஸ்போர்ட் மோசடி வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
கடந்த 2000மாவது ஆண்டு லாஸ் ஏஞ்சலெஸில் உள்ள மசூதியில் வைத்து மோனிகாவை, அபு சலீம் மணந்து கொண்டதாக முன்னர் செய்திகள் வெளியாகின.
ஆனால் மோனிகா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தான் அபு சலீம் கூட பலமுறை தங்கியது உண்மைதான். ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில்தான் டெல்லி கோர்ட்டில், மோனிகா எனது மனைவி, அவரை விரும்புவதாக ராகுல் மகாஜன் தெரிவித்தது தனது மனதை வேதனை அடையச் செய்ததாக தெரிவித்துள்ளார் அபு சலீம்.
இதற்கிடையே, மோனிகாவிடம் நான் ஐ லவ் யூ சொல்லவில்லை. இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே என்று ராகுல் மகாஜன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











