ராம்கோபால் வர்மாவுக்கு நோட்டீஸ்

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி ஹிட் ஆன படம் பூங்க். பேய்ப் படமான இதில், மூட நம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் படத்தின் கதை இருப்பதாக கூறி பாண்ட்யா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீஸில், இந்தப் படத்தை தனியாக யாரும் அமர்ந்து பார்க்க முடியாது. அப்படி பார்த்தால் அவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு தருகிறேன் என்று சவால் விட்டுள்ளார் வர்மா. இது மூட நம்பிக்கையை வளர்க்கும் செயலாகும்.
வர்மாவின் சவாலை நான் ஏற்றுக் கொண்டேன். ஆனால் மும்பையில் உள்ள தியேட்டர்களில் படம் பார்ப்பவர்களுக்கு மட்டுமே இந்த சவால் செல்லும் என படத்தின் தயாரிப்பாளர் கூறுகிறார். இதன் மூலம் பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடித்து தனது படத்திற்கு விளம்பரம் தேடுகிறார் வர்மா என்பது நிரூபணமாகியுள்ளது.
மேலும் படத்தின் கதையும் மக்களை குழப்பும் வகையில் உள்ளது. படித்த டாக்டரை விட படிக்காத மந்திரவாதி பெரியவர் என்பது போல காட்டியுள்ளனர். இது மிகவும் முட்டாள்தனமானது. இப்படிப்பட்ட ஒரு படத்தை தனியாக அமர்ந்து பார்ப்பது என்பதே முட்டாள்தனமான செயலாகும் என்று கூறியுள்ளார் பாண்ட்யா.


Click it and Unblock the Notifications











