யோகிக்குத் தடை வருமா?

இதுதொடர்பாக பருத்தி வீரன் படத்தைத் தயாரித்தவரான ஞானவேல்ராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,
பருத்திவீரன் படத்தின் விநியோக உரிமையை 7 மாவட்டங்களுக்கு இயக்குனர் அமீருக்கு வழங்கினேன். இதுதொடர்பாக ரூ.1 கோடியே 53 லட்சம் எனக்கு அவர் தரவேண்டியுள்ளது.
இந்த பணத்தை தராமல் அவர் யோகி படத்தை தயாரித்துள்ளார். இதில் கதாநாயகனாக அவர் நடித்துள்ளார். யோகி படத்தை திரையிடுவதற்கு முன்பு ரூ.1 கோடியை டெபாசிட் செய்ய உத்தரவிட வேண்டும். அவ்வாறு டெபாசிட் செய்யாமல் படத்தை திரையிட அனுமதிக்க கூடாது.
படத்தின் 2 மாவட்ட விநியோக உரிமையை அமீர் வைத்துள்ளார். இதில் வசூலாகும் கணக்கை கண்காணிக்க வக்கீல் கமிஷனை நியமிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயசூரியா முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications











