ஆபாச சினிமா போஸ்டர்கள் - செருப்பால் அடித்து புதுவையில் போராட்டம்

கலாச்சாரம், மனது ஆகியவற்றை சீரழிக்கும், ஆபாச சினிமா படங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய மாதர் தேசிய சம்மேளன அமைப்பினர், புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள ரத்னா திரையரங்கம் முன் போராட்டம் நடத்தினர்.
அங்கு ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை, செருப்பால் அடித்தும், கிழித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு, இந்திய மாதர் தேசிய சம்மேளன நகர தலைவர் ராஜலட்சுமி, நகர செயலர் லதா ஆகியோர் தலைமை தாங்கினர். பொது செயலர் சரளா, மாநிலத் தலைவர் வசந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தடை செய்க...
பெண்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிடப்படும் சினிமா படங்களைத் தடை செய்ய வேண்டும். ஆபாச திரைப்படங்களை வெளியிடும் சினிமா தியேட்டர் உரிமையாளரை கைது செய்ய வேண்டும். இளைஞர்களை சீரழிக்கும் ஆபாச திரைப்படங்களை வெளியிடக் கூடாது என போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் வலியுறுத்தினர்.


Click it and Unblock the Notifications











