குசேலன்: பி.வாசுவுக்கு புது சிக்கல்!

குசேலன் படத்தில் பசுபதியும், வடிவேலுவும் சலூன் கடை வைத்திருப்பவர்களாக நடித்துள்ளனர். இது தற்போது சர்ச்சையைக் கிளப்பி விட்டு விட்டது.
தமிழ்நாடு முடி திருத்தும் தொழிலாளர் நலச் சங்கத்தின் மாநில ஆலோசனைக் கூட்டம் சங்கத்தின் தலைவர் நடேசன் தலைமையில் நடந்தது.
இதில் குசேலன் படத்தில் தங்களது தொழிலையும், தங்களையும் வாசு அவமதித்து விட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது.
இதுகுறித்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், குசேலன் திரைப்படத்தில் நகைச்சுவை என்ற பெயரில், லட்சக்கணக்கான முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில், கதை,வசனம், நடிப்பு போன்றவற்றை அமைத்து படத்தை இயக்கிய டைரக்டர் வாசு வீடு முன்பு 29ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெதரிவிக்கப்பட்டுள்ளது.
கோபாலபுரத்தில் உள்ள வாசுவின் வீட்டு முன்பு நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில் பெரும் திரளான முடி திருத்தும் தொழிலாளர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











