எகிப்து பிரமிட் செட்டில் ரஜினி - நயன் டான்ஸ்

பி.வாசுவின் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயனதாரா நடிக்கும் குசேலன் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக படமாகிக் கொண்டிருக்கிறது.
இங்கு வைத்து பல்வேறு காட்சிகளை ஷூட் செய்து வருகிறார் வாசு. பிரமாண்ட செட்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
சமீபத்தில் ரஜினிகாந்த் அறிமுகமாகும் காட்சிக்கான பாடலைப் பதிவு செய்தார் வாசு. தற்போது நயனதாரா, ரஜினி ஆடிப் பாடும் டூயட் பாடலை படமாக்கி வருகிறார் பி.வாசு. இந்தப் பாடலுக்காக எகிப்து பிரமிடு போன்ற செட் போடப்பட்டுள்ளது.
சிவாஜி படத்தில் பிரமாண்ட செட்களைப் போட்டு அசத்திய தோட்டா தரணிதான் இந்த செட்டையும் போட்டுள்ளார். 2 வார உழைப்பில் இந்த செட் உருவாகியுள்ளது.
எகிப்தியர்கள் போன்ற உடையுடன், ரஜினியும், நயனதாராவும் இப்பாடலில் தோன்றுகின்றனர்.
ரசிகர்களைக் கவரும் வகையில் இந்தப் பாடலில் ரஜினிகாந்த் அட்டகாசமான உடையுடன் தோன்றுகிறார் ரஜினி. விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் குசேலன் படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்ததும் ஆலப்புழா மற்றும் பொள்ளாச்சிக்கு குசேலன் யூனிட் இடம் பெயரவுள்ளது.


Click it and Unblock the Notifications











