திகில் படத்தை இயக்குகிறார் ராம நாராயணன்

சின்ன பட்ஜெட் படங்களைத் தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்றவர் ராம நாராயணன். பல்வேறு மொழிகளில் படங்கள் இயக்கிய பெருமைக்கும் உரியவர். இப்படிப்பட்ட ராம நாராயணன் பல ஆண்டுகளாக இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருக்கிறார்.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக இருக்கும் ராம நாராயணன் கடைசியாக 1995ம் ஆண்டு கலைஞரின் மண்ணின் மைந்தர்கள் படத்தை இயக்கியிருந்தார்.
அதன் பிறகு தற்போது முதல் முறையாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்க வருகிறார்.
இந்தப் படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிறது. இது ஒரு சஸ்பென்ஸ் திரில்லராகும். குழந்தை ஒன்றுதான் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரம்.
இது தவிர சங்கீதாவும் படத்தில் இருக்கிறார். சத்தம் போடாமல் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருக்கிறதாம்.
More from Filmibeat
இயக்கம் சினிமா தமிழ் திரில்லர் படம் மண்ணின் மைந்தர்கள் ராம நாராயணன் cinema direction mannin mainthargal rama narayanan suspence thriller


Click it and Unblock the Notifications











