'திரு திரு துறு துறு'... திருட்டு, காதல், மோதல், ஜாலி!

By Staff

Ajmal and Meenakshi
சத்யம் சினிமாஸ், இப்போது முதல் முறையாக திரைப்படத் தயாரிப்பில் களமிறங்குகிறது.

படத்தி்ன் பெயர் 'திரு திரு துறு துறு'. ஜூலையில் வெளியாகவிருக்கும் இந்தப் படம் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் அட்டகாசமான படைப்பாக வெளிவருகிறது.

'திரு திரு துறுதுறு' முழுக்க முழுக்க ரெட் ஒன் காமிராவில் படமாக்கப்பட்டுள்ளது. தமிழில் வெளியாகும் இந்தப் படம், ஒரே நேரத்தில் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது.

ஒரு குழந்தையைக் கடத்தும் இளைஞன் அவனை ஏற்க மறுக்கும் காதலி, அவர்களது நண்பன் ஆகியோர் படும் பாடுகளையும், கலாட்டாக்களையும் இரண்டரை மணி நேரம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் விதத்தில் சொல்லியிருக்கிறார்களாம்.

'அஞ்சாதே' புகழ் அஜ்மல் இந்தப் படத்தின் நாயகனாக நடித்துள்ளார். ரூபா என்ற புதுமுகம் நாயகியாக அறிமுகமாகிறார். பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் தங்கப்பதக்கம் வென்ற நந்தினி இந்தப் படத்தின் மூலம் இயக்குனராகிறார்.

'கண்ட நாள் முதல்' படத்தில் ப்ரியாவியிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் நந்தினி. இவர் எடுத்த ஓட்டம் எனும் குறும்படம் தமிழக அரசின் இரட்டை விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X