ஸ்டார் வீடு ரொம்ப ஜோரு!!

By Staff

Sneha Cheran
இது நட்சத்திரங்கள் சொந்த வீடு கட்டி அழகு பார்க்கும் சீஸன் போலிருக்கிறது.

நடிகரும் இயக்குநருமான சேரன் தனது சொந்த ஊரான மேலூரில் ஒரு பங்களா கட்டி சமீபத்தில்தான் கிரகப் பிரவேசம் நடத்தியுள்ளார். அவரது பெற்றோரின் பல நாள் கனவாம் அது.

சேரனின் தந்தை மேலூரில் ஒரு திரையரங்கில் ஆபரேட்டராக இருந்தவர். சொந்த வீட்டில் குடியிருக்க வேண்டும் என்ற அவரது 40 ஆண்டு கால கனவு சேரன் மூலம் நிறைவேறி இருக்கிறது.

நட்சத்திர ஜோடிகளான சூர்யாவும்-ஜோதிகாவும் அடையாரில் ஒரு சொகுசு பங்களாவை விலைக்கு வாங்கியிருக்கிறார்களாம். ரூ.8 கோடி கொடுத்து அந்த பங்களாவை வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த புதிய வீட்டில் தன் தாய், தந்தை என குடும்பத்தோடு குடியேறப் போகிறாராம் சூர்யா.

வளர்ந்து வரும் நடிகர் பிரசன்னா ஆழ்வார்திருநகரில் புதிய வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்.

நடிகைகள் மட்டும் சளைத்தவர்களா என்ன... இதோ அவர்களும் 'வூடு' கட்டி கலக்கிக் கொண்டுள்ளனர்.

புன்னகை இளவரசி சினேகா சென்னை ஆலப்பாக்கத்தில் பெரிய மாளிகை கடடி வருகிறார். தற்போது இண்டீரியர் வேலைகள் நடந்து வருகின்றன. அவரது அப்பாவே அதை நேரடியாக மேற்பார்வையிடுகிறாராம்.

விரைவில் அந்த வீட்டில் குடியேறப் போகிறார் குடும்பத்துடன். புது வீட்டில் முதல் நிகழ்வே, அவரது சகோதரர்களது திருமணம்தானாம் (தங்கச்சிக்கு எப்ப?).

அசின் மும்பையில் லோகண்ட் வாலா பகுதியில் ஒரு பிளாட் வாங்கி குடிபோய் விட்டார். பாவனா திருச்சூரில் வீடு கட்டிக் கொண்டிருப்பதை ஏற்கெனவே சொல்லியிருந்தோம்.

தென்னிந்தியை கனவு தேவதை, திரிஷா ஒரு பெரிய பண்ணை மாளிகையையே உருவாக்கிக் கொண்டிருக்கிறார், சென்னைக்குப் பக்கத்தில்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X