ஸ்லம்டாக் வசூல் ரூ.800 கோடி!

By Staff

Slumdog Millionaire movie still
படத்துக்குப் பெயரில்தான் 'தெருநாய்' என்றுள்ளதே தவிர, அது தியேட்டர்கள் மூலம் குவித்துள்ள தொகையைக் கேட்டால் அசந்து போவீர்கள் அசந்து.

8 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய இந்தப்படம் ரூ.75 கோடிக்கு எடுக்கப்பட்டது. ஆனால் படத்தை முடித்துவிட்டு திரும்பிப் பார்த்தால் வாங்கிக் கொள்ள ஒருவரும் முன்வரவில்லை.

படத்தின் தயாரிப்பாளரோ பணமுடையில் அவதிப்பட ஆரம்பித்தார். அப்போதுதான் ஃபாக்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை வாங்கிக் கொள்ள முன்வந்தது பெரும் தொகைக்கு. நிம்மதிப் பெருமூச்சுடன் படத்தை மொத்தமாகத் தள்ளிவிட்டார்கள்.

அமெரிக்காவில் படம் ரிலீஸாகி, நல்ல விமர்சனங்கள் வரவர, பாக்ஸ் ஆபீஸ் நிலவரமும் மற்ற படங்களுக்கு புளியைக் கரைக்கிற அளவுக்கு வரத் துவங்கியது.

அமெரிக்காவில் இதர நாடுகளிலும் இன்றைய தேதிக்கு அந்தப் படம் ரூ.800 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கோல்டன் குளோப் விருது கிடைத்த பிறகு இந்தப் படம் அமெரிக்காவின் உள்ளார்ந்த பகுதிகளிலும் விரும்பிப் பார்க்கப்படுகிறது, அதன் இசை விரும்பி கேட்கப்படுகிறது.

இந்நிலையில் இந்தியாவின் தமிழ் உள்ளிட்ட முக்கிய மொழிகளில் ஸ்லம்டாக்கை வெளியிடப்போகிறார்கள். தமிழ்ல் 100 தியேட்டர்களில் நானும் கோட்டீஸ்வரன் எனும் பெயரில் இந்தப்படம் ரிலீசாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X