வைரமுத்துவின் கிரிக்கெட் பாட்டு

இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐபிஎல் லீக்கில் 8 அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த அணிகள் மோதும் 20-20 போட்டித் தொடர் ஏப்ரல் 18ம் தேதி தொடங்குகிறது. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு இப்போட்டிகள் நடைபெறும்.
எட்டு அணிகளில் சென்னை நகர அணியும் ஒன்று. இந்த அணிக்கு சூப்பர் கிங்ஸ் என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த அணியில் இந்திய கேப்டன் டோணி, இலங்கையின் முத்தையா முரளீதரன், ஆஸ்திரேலியாவின் மாத்யூ ஹைடன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த அணியின் பிரான்ட் அம்பாசடர்களாக நடிகர் விஜய்யும், நடிகை நயனதாராவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது சூப்பர் கிங்ஸ் அணிக்காக தீம் பாடலை உருவாக்கி வருகின்றனர்.
இதுதொடர்பான விளம்பரப் படத்தை இயக்கி, ஒளிப்பதிவும் செய்கிறார் ராஜீவ் மேனன் இயக்குகிறார். வைரமுத்து இப்படத்திற்கான பாடலை எழுதுகிறார். விஜய்யும், நயனதாராவும் நடிக்கின்றனர்.
மணிசர்மாவின் இசையில் உருவாகும் இந்த விளம்பரப் படம் ஏவி.எம். ஸ்டுடியோவில் இதற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏப்ரல் முதல் வாரத்தில் இந்தப் படம் தயாராகி விடுமாம்.
'கிங்' ஆப் சென்னையும், 'பென்' ஆப் தமிழும் இணைந்தால் மிரட்டலாகத்தான் இருக்கும்.


Click it and Unblock the Notifications











