இரும்புக்கோட்டை.. முரட்டு சிங்கம்-ரூ.1 கோடி செட்!

ராகவா லாரன்ஸ்- பத்மபிரியா- லட்சுமி ராய்- சந்தியா இணைந்து நடிக்கும் புதிய படம் இரும்புகோட்டை முரட்டுசிங்கம். சிம்புதேவன் இயக்குகிறார்.
பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.
இந்த படத்துக்காக அம்பாசமுத்திரம் அருகே உள்ள அடையக்கருங்குளத்தில் ரூ.1 கோடி செலவில் பிரமாண்டமான இரும்பு கோட்டை போன்ற செட் போடப்பட்டுள்ளது.
இந்த அரங்கில்தான் கடந்த நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. நேற்று முன்தினமும், நேற்றும் மழை பெய்ததால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
தமிழில் ஜெய்சங்கர் காலத்துக்குப் பிறகு எடுக்கப்படும் முதல் கௌபாய் படம் என்பதால் இந்தப் படத்துக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Comments
ambasamuthiram அம்பாசமுத்திரம் இரும்புகோட்டை முரட்டுசிங்கம் சினிமா சிம்பு தமிழ் பத்மபிரியா லாரன்ஸ் cinema irumbukottai murattu singam lawrence padma priya simbhudevan


Click it and Unblock the Notifications