சௌந்தர்யா ரஜினி மீது மேலும் ஒரு வழக்கு... வருமா கோவா?

By Staff

Sneha and Soundarya
சென்னை: கோவா படத்துக்காக கடன் வாங்கிய வகையில் ரஜினி மகள் சௌந்தர்யா மீது மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது சென்னை உயர்நீதி மன்றத்தில்.

இந்த வழக்கதைத் தொடர்ந்திருப்பவர் பெயர் கமலேஷ் கோத்தாரி. சென்னை தி நகராச் சேர்ந்த பைனான்சியர்.

கோவா படத்துக்காக சௌந்தர்யா ரஜினிகாந்த் தன்னிடம் ரூ 2 கோடி கடன் பெற்றதாகவும், அந்த கடனை திருப்பிச் செலுத்தாமலேயே கோவா படத்தை வெளியிட முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவா படம் நாளை (ஜனவரி 29ம் தேதி) வெளியாக உள்ளதால், இந்தப் பணத்தை அதற்கான ராயல்டி தொகை ரூ 30 லட்சத்தோடு உடனடியாக திருப்பித் தரவேண்டும், இல்லாவிட்டால் படத்தை வெளியிடக்கூடாது என அந்த கோத்தாரி கூறியுள்ளார்.

இந்தக் கடனை கடந்த அக்டோபர் மாதம் பல தவணைகளாக சௌந்தர்யா பெற்றுள்ளார். சௌந்தர்யா ரஜினி மற்றும் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு இருவரும் இணைந்தே கையெழுத்துப் போட்டு கடன் பெற்றதாக கோத்தாரி தெரிவித்துள்ளார்.

கமலேஷ் கோத்தாரி சார்பில் வக்கீல் அபுடுகுமார் மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி வி.ராமசுப்பிரமணியம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. செளந்தர்யா தரப்பில் வக்கீல் ஹரிசங்கர் ஆஜராகி நோட்டீசை பெற்றுக் கொண்டார்.

இந் நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி ராமசுப்ரமணியன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது பைனான்சியருக்கு தரவேண்டிய பணத்தைத் தந்துவிடுகிறோம். கோவா படத்துக்கு தடை விதித்துவிடாதீர்கள் என்று நீதிமன்றத்தில் சௌந்தர்யாவின் மகள் பதில் மனு தாக்கல் செய்தார்.

சௌந்தர்யா தரப்பில் வழக்கறிஞர் ஹரிசங்கர் ஆஜராகி, கடன் தொகையை திருப்பித் தர தயாராக இருக்கிறோம். படத்துக்கு தடைவிதிக்க வேண்டாம். சிறிது கால அவகாசம் தரவேண்டும் என்று மனுதாக்கல் செய்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X