சீமான்-அமீருடன் இயக்குநர்கள்-நடிகர்கள் சந்திப்பு
மதுரை: மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீரை இயக்குநர் சங்கத் தலைவர் பாரதிராஜா தலைமையிலான குழுவினர் இன்று சந்தித்துப் பேசினர்.
ராமேஸ்வரம் திரையுலகப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக சீமான் மற்றும் அமீர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை இன்று பாரதிராஜா தலைமையிலான குழுவினர் சிறைக்குச் சென்று சந்தித்தனர். இக்குழுவில் இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, பாலா, சேரன், நடிகர்கள் சத்யராஜ், பார்த்திபன் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.
பின்னர் வெளியே வந்த பாரதிராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், சீமான், அமீரை நாங்கள் சந்தித்துப் பேசினோம். அப்போது அவர்கள் எங்களிடம், தமிழ் இனப் படுகொலையை எதிர்த்து கைதாகியிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியையே தருகிறது.
நாங்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறோம். தமிழ் இனம் படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். போரை நிறுத்த வேண்டும் என தார்மீக குரல் கொடுத்து சிறைக்கு வந்துள்ளோம். இதை பெருமையாக கருதுகிறோம் என்றனர் என்றார்.


Click it and Unblock the Notifications











