Don't Miss!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே கேப்டனாக மாபெரும் சாதனை.. தோனியின் ரெக்கார்டை உடைத்து எறிந்த ருதுராஜ்
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சன் டிவியில் பிரமாண்ட கேம் ஷோ - டீலா நோ டீலா
20க்கும் மேற்பட்ட டிவி சானல்களுடன் உள்ள சன் டிவி குழுமம் இந்தியாவின் மிகப் பெரிய டிவி குழுமத்தில் முக்கியமான இடத்தில் உள்ளது.
சன் டிவியில் தற்போது டீலா நோ டீலா என்ற பெயரில் புதிய கேம் ஷோ ஒளிபரப்பாகவுள்ளது.
மொத்தம் 26 எபிசோடுகளுடன் இந்த கேம் ஷோ ஒளிபரப்பாகும். அக்டோபர் 31ம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தினசரி இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை இது ஒளிபரப்பாகும்.
ஒவ்வொரு போட்டியாளரும் ரூ. 50 லட்சம் வரை இதில் பரிசை வெல்ல முடியும்.
உலகத் தரம் வாய்ந்த அரங்குகளில் இது நடைபெறவுள்ளது. எளிமையான போட்டி, சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் வகையிலான விறுவிறுப்பான போட்டிகள் என விருந்து படைக்கக் காத்திருக்கிறது டீலா நோ டீலா.
ஒவ்வொரு எபிசோடிலும், பார்வையாளர்களுக்காக ரூ. 1 லட்சம் பரிசுத் திட்டமும் உள்ளது.
ஆனந்த தாண்டவம் படத்தில் நடித்த நடிகர் ரிஷி இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார்.