சினேகா, பிரியா மணி பங்கேற்கும் சென்னை மினி மராத்தான்-நாளை நடக்கிறது

By Sudha

Priyamani
சென்னை: தமிழ் மையத்தின் கிவ் லைஃப் அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்படும் மினி மராத்தான் ஓட்ட நிகழ்ச்சி நாளை சென்னையில் நடைபெறுகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக இந்த ஓட்டத்தை நடத்தி வருகிறது கிவ் லைஃப் அறக்கட்டளை. மூன்றாவது ஆண்டாக நாளை மினி மராத்தான் நடைபெறவுள்ளது.

ஆண்களுக்கான மினி மராத்தான் (21 கிலோ மீட்டர்), பெண்களுக்கான மினி மராத்தான் (21 கிலோ மீட்டர்), அனைத்து பிரிவினரும் பங்கேற்கலாம் 7 கிலோ மீட்டர் ஓட்டம் (ஐ.லவ் சென்னை சிட்டி ரன்) வீல்சேர் ஓட்டம் ஆகிய பிரிவுகளில் பந்தயம் நடக்கிறது.

இந்த மராத்தான் பந்தயத்தில் இந்தியா முழுவதும் இருந்து 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பேர் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

8 ஆயிரம் ஏழைக்குழந்தைகளின் கல்விக்காக நடத்தப்படும் இந்த மராத்தான் பந்தயம் அண்ணா சதுக்கத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

அங்கிருந்து சாந்தோம், அடையாறு, பெசன்ட்நகர், வேளாங்கண்ணி சர்ச் சென்று அதே வழியாக திரும்ப (21 கிலோ மீட்டர்) வேண்டும். தேசிய அளவில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும். தமிழக அளவில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும்.

மராத்தான் ஓட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு வசதியாக 1 லட்சம் தண்ணீர் பாட்டில்கள் வைக்கப்படும். ஏராளமான இலவச குளிர்பானங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 8 ஆம்புலன்சுகளும், 9 மருத்துவ உதவி மையங்களும் பணியமர்த்தப்படுகின்றன.

இந்த மராத்தான் பந்தயத்தை திமுகவின் கனிமொழி எம்.பி. தொடங்கி வைக்கிறார். அமைச்சர்கள் மைதீன்கான், தங்கம் தென்னரசு, பூங்கோதை, மேயர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

சினேகா-பிரியாமணி ஓடுகிறார்கள்

நடிகர் ஆர்யா, நடிகைகள் சினேகா, பிரியாமணி ஆகியோர் 7 கிலோ மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். தூர்தர்சன் விளையாட்டு சேனலில் மராத்தான் பந்தயம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

ஓட்டத்தின் முடிவில் டிரம்ஸ் சிவமணியின் சிறப்பு இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. மராத்தான் பந்தயத்தையொட்டி மெரீனா கடற்கரை ரோட்டில் காலையில் இருந்து 10 மணிவரை அல்லது பந்தயம் முடியும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X