த்ரீ இடியட்ஸ்-சூர்யா இல்லாமலேயே ஷூட்டிங்கைத் தொடங்கினார் ஷங்கர்!

விஜய் நடிப்பதாக இருந்த இந்தப் படத்தில், இப்போது அவருக்குப் பதில் சூர்யா நடிப்பதாகக் கூறப்பட்டது.
ஆனால் ஷங்கருக்கே நிபந்தனை விதிக்கும் அளவுக்கு தான் உயர்ந்துவிட்டதாக நினைத்து தெலுங்கு ரைட்ஸ், ரூ 10 கோடி சம்பளம், தமிழ்ப் பதிப்பைத் தயாரிக்கும் உரிமை என அவர் பேச ஆரம்பிக்க, சூர்யாவைத் தொங்கலில் விட்டார் ஷங்கர். 'கொள்ளு வேணாம் புல்லே போதும்' என்று குதிரை இறங்கிவரும் சூழ்நிலையும் உண்டு என்பது ஜாம்பவானான ஷங்கருக்குத் தெரியாதா என்ன!
இப்போது ஷங்கர் சொல்வதைக் கேட்டு நடிக்கும் மூடுக்கு சூர்யா வந்திருக்கிறாராம்.
இதற்கிடையே, 'அவருக்கு மூடு வந்து நடிக்கிற போது நடிக்கட்டும், இப்போது வேலையை ஆரம்பிப்போம்' என்ற நினைப்பில் ஜனவரி 25-ம் தேதி ஊட்டியில் படப்பிடிப்பை ஆரம்பித்துவிட்டார் ஷங்கர். ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஷூட் பண்ணவும் தொடங்கிவிட்டார்.
லேட்டஸ்ட் நிலவரம் குறித்து ஷங்கர் தரப்பில் விசாரித்தோம்.
"யார் ஹீரோவாக இருந்தாலும் 3 இடியட்ஸ் படம் நிற்கப்போவதில்லை. அதை உணர்த்தத்தான் இப்போது படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளோம். இந்த நிமிஷம் வரை சூர்யா இருக்கிறார் என்றுதான் நினைக்கிறோம். ஹீரோ மாறுவாரா இல்லையா என்பதை இப்போது சொல்வதற்கில்லை" என்கிறார்கள்.
இதற்கிடையே, இந்தப் படத்தில் மீண்டும் விஜய் நடிப்பதாக செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.


Click it and Unblock the Notifications











