இந்தியில் விண்ணைத் தாண்டி வருவாயா

இந்த ஆண்டில் வெளியான சூப்பர் ஹிட் காதல் படமான விண்ணைத் தாண்டி வருவாயா எல்லை தாண்டி இந்திக்குப் போயுள்ளது. ஆர்.எஸ். இன்போன்டெய்ன்மென்ட் மற்றும் கெளதம் மேனனின் போட்டான் பேக்டரி இணைந்து இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்கின்றன.
இப்படத்தையும் கெளதம் மேனனே இயக்கவுள்ளார். இந்திப் பதிப்பில் சிம்பு வேடத்தில் பிரதிக் பாபர் நடிக்கிறார். இவர் பிரபலமான முன்னாள் ஹீரோ ராஜ் பாபரின் மகன் ஆவார். ஹீரோயினாக திரிஷாவே நடிக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இந்திப் படத்திற்கும் இசையமைக்கிறார். அந்தோணி எடிட்டிங்கைக் கவனிக்க, ராஜீவன் கலையைக் கவனிக்க, கேமராமேனாக பணியாற்றுகிறார் மனோஜ் பரமஹம்சா.
திரிஷாவுக்கு இது 2வது இந்திப் படமாகும். முதல் படமான கட்டா மீத்தா சமீபத்தில்தான் திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கிறது. சூட்டோடு சூடாக அவர் அடுத்த இந்திப் படத்திற்குத் தயாராகி விட்டார். அதுவும் தமிழில் பெரும் வெற்றி பெற்ற படமான விண்ணைத் தாண்டி வருவாயா மூலம் அவர் இந்தியில் தனது 2வது அடியை எடுத்து வைப்பது குறிப்பிடத்தகக்து.


Click it and Unblock the Notifications











