கோவா திரை விழா: இசை, கலை நிகழ்ச்சிகள் ரத்து

இதுகுறித்து அவர் பனாஜியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், வி.பி.சிங் மறைவுக்கு கோவா அரசு 7 நாள் அரசு முறைத் துக்கம் அறிவித்துள்ளது.
இதுதவிர மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தையும் மனதில் கொண்டு, சர்வதேச இந்திய திரைப்பட விழாவின் கலாச்சார மற்றும் இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை ரத்து செய்யப்படுகின்றன.
முன்னாள் பிரதமருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வி.பி.சிங்கை நாட்டின் பெருமையாக கருதுகிறோம். நாட்டின் பெருமைக்குத்தான் முதல் மரியாதை செலுத்த வேண்டும். மற்றவை எல்லாம் பிறகுதான். இதை மக்கள் உணர்ந்து கொள்வார்கள் என்றார்.
திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக வாஸ்கோ, மர்மகோவா, பாண்டா ஆகிய பகுதிகளில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது நினைவிருக்கலாம். தற்போது அவை அனைத்தும் ரத்தாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











