சோனா-சுஜாவுக்கு வந்த கிராக்கி!

அந்தக் காலத்தில் ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி, அனுராதா என ஒவ்வொரு காலத்திலும் ஒரு குத்தாட்ட நாயகி கோலோச்சி வந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த நிலை மாறி விட்டது. கிட்டத்தட்ட எல்லாப் பேருமே குத்தாட்ட நாயகிகள்தான் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. ஹீரோயின்களே கூட குத்தாட்டத்தில் குதித்து கலக்கிக் கொண்டிருக்கின்றனர்.
இருப்பினும் ரகஸ்யா, முமைத்கான், தேஜாஸ்ரீ, சுஜா என சிலர் குத்தாட்டத்தில் ஸ்பெஷலிஸ்ட்டாக உள்ளனர். இதனால் இவர்கள் இல்லாத படங்களே இல்லை என்ற நிலை இருந்தது.
ஆனால் தேஜாஸ்ரீ இப்போது குத்தாட்டத்திற்கு சம்மதிப்பதில்லை. ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என அவர் ஒதுங்கி விட்டார். முமைத்கானும் ஹீரோயின் ஆகி விட்டார். தெலுங்கில் தனி நாயகியாக கலக்கிக் கொண்டிருக்கிறார். ரகஸ்யா என்ன ஆனார் என்பது தெரியவில்லை.
இதனால் சுஜா மட்டுமே இப்போதைக்கு குத்தாட்டத்திற்கு அவெய்லபிளாக உள்ளார். இந்த வரிசையில் புதிதாக சேர்ந்துள்ளார் சோனா.
ஹீரோயினாக அறிமுகமான இவர், தனது மிதமிஞ்சிய கவர்ச்சி காரணமாக குத்தாட்ட நாயகியாக உருவெடுத்துள்ளார். இவரைத் தேடி நிறைய குத்தாட்ட வாய்ப்புகள் படையெடுக்கின்றனவாம்.
குத்துப் பாட்டுக்கு ஆட நாயகிகள் பஞ்சம் இருப்பதால், சுஜாவையும், சோனாவையும் தேடி நிறைய வாய்ப்புகள் வருகிறதாம். இதனால் சந்தோஷமடைந்துள்ள இருவரும், தங்களது ஹீரோயின் கனவுகளை ஓரங்கட்டி விட்டு சிங்கிள் பாட்டுக்கு டான்ஸ் ஆட கிளம்பியுள்ளனராம்.
இந்த இரண்டு பேரில் சோனாவுக்குத்தான் கை நிறையப் படங்கள் இருப்பதாக கடைசியாக வந்த தகவல் தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications











