பாலா படத்தில் ஜீவா?

3 ஆண்டுகள் தயாரிப்பிலிருந்து வெளிவந்த படம் பாலாவின் நான் கடவுள். உலகம் முழுவதும் பெரும் பாராட்டுக்களைப் பெற்ற படம் இது. வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இப்போது புதிய படம் உருவாக்கும் முயற்சியில் உள்ளார் பாலா. இந்தப் படத்தை குறுகிய காலத்தில் எடுத்து வெளியிடப் போவதாக அவர் நிருபர்களிடம் கூறியிருந்தார்.
இதையடுத்து தனது கதை விவாதத்தைத் தொடங்கிவிட்ட பாலா, இடையில் ஒருநாள் ஜீவாவை அழைத்து நடிக்க விருப்பமா என்று கேட்டுள்ளார்.
பாலா படத்தில் நடிக்க அவருக்கு கசக்கவா செய்யும்... உடனடியாக சம்மதித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த சில தினங்களாகவே செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
ஆனால் இந்தத் தகவல்கள் எதையும் பாலா மறுக்கவுமில்லை, உறுதிப்படுத்தவுமில்லை. வழக்கம்போலவே ஒரு சித்தர் சிரிப்புடன் வேலையை ஆரம்பித்துவிட்டார்.
Comments


Click it and Unblock the Notifications