வந்தது இசையருவி புதிய சேனல்

By Staff

Kalaingar TV
கலைஞர் டிவியின் 24 மணி நேர மியூசிக் சானலான 'கலைஞர் இசையருவி' முறைப்படி தனது ஒளிபரப்பைத் தொடங்கியுள்ளது.

கலைஞர் டிவி நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. பிறந்து ஒரு வயது கூட ஆகாத நிலையில் அடுத்த குழந்தை, கலைஞர் டிவி குழுமத்திலிருந்து சமீபத்தில் பிறந்தது.

சில வாரங்களுக்கு முன்பு கலைஞர் இசையருவி என்ற புதிய இசை சானலின் சோதனை ஒளிபரப்பு தொடங்கியது. இந் நிலையில் முறைப்படியான ஒளிபரப்பு தொடகப்பட்டுள்ளது.

பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியில், இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு இசையருவியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் இளையராஜா பேசுகையில், இசைதான் எனது வாழ்க்கை. இந்த இசையருவியிலிருந்து நல்லிசை தங்கு தடையின்றி பொங்கி பிரவகிக்கட்டும் என்றார் இளையராஜா.

இசையருவி சானலுடன், சோஷியல் மீடியா இந்தியா நிறுவனம் பங்குதாரராக இணைந்துள்ளது.

சேனல் தொடக்க விழாவில், கலைஞர் டிவியின் இயக்குநர் மற்றும் தலைவரான சரத் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X